Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம்: தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் எச்சரிக்கை

ஜுலை 30, 2020 07:11

பெங்களூரு: கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலித்த பிரபல மருத்துவமனைக்கு மாநில அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: கொரோனாவிற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 -ம் தேதி 64 வயதான கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கான சிகிச்சை கட்டணம் ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதற்கு அவர்கள் காப்பீடு கட்டணத்தின் படி பில்லிங் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் நோயாளிகள் கட்டணத் தொகையால் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன் . இது குறித்தும் பல முறை எச்சரித்தேன். குறிப்பிட்ட மருத்துவமனை அரசின் வழிகாட்டுதல்களையும் எச்சரிக்கைகளையும் கவனிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை கட்டணம் ரூ.9 லட்சம் வசூலித்துள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் மகன் எனது தந்தை இன்னும் மருத்துவமனையில் இருப்பதால் நான் கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும், எனது தந்தை குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியே கொண்டு வருவதுதான் முதல்பணி. இது குறித்து கருத்து தெரிவிப்பதன் மூலம் இந்த விசயத்தை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என கூறி உள்ளார். நோயாளியின் மகனும் மருத்துவத்துறையில் உள்ளார் என கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்