Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியை போல் தமிழகத்திலும் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜுலை 31, 2020 07:16

சென்னை: டெல்லியில் டீசல் மீதான் வாட் வரி குறைக்கப்பட்டதைப் போல, தமிழகத்திலும் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

டில்லி அரசு டீசல் மீதான வாட் வரியை, 30 சதவீதத்தில் இருந்து 15.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை ரூ.9 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில், டில்லி அரசின் முடிவை வரவேற்றுள்ள ஸ்டாலின், தமிழக அரசும் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: டீசல் மீதான வாட் வரியை, பாதியாக குறைத்து, டீசல் விலையை டில்லி அரசு, லிட்டருக்கு சுமார் ரூ.9 வரை குறைத்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய முடிவு. தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும். இதனால், மாநிலத்தில் விலைவாசி குறைய வாய்ப்பு உண்டாகும். வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்