Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 72.3 சதவீதமாக உயர்வு

ஆகஸ்டு 01, 2020 06:43

ஐதாராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. மாநிலத்தின் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. தெலுங்கானாவில் நோய் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 62,703 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் கொரோனாவால் 14 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 816 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,388 ஆக அதிகரித்தது. தெலுங்கானாவின் கொரோனா மீட்பு விகிதம் 72.3 சதவீதமாக உள்ளது. ஒப்பிடுகையில் தேசிய சராசரி 64 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் 10,632 பேர் வீட்டுத் தனிமையிலும், 16,796 பேர் சிகிச்சையிலும் உள்ளனர். நேற்றுமுன்தினம் முதல் நேற்றிரவு வரை 21,380 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1,986 பேருக்கு தொற்று உறுதியானது.

தலைப்புச்செய்திகள்