Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகராட்சி அலுவலக பெண்கள் கழிப்பறையை சுத்தம் செய்த ம.பி., அமைச்சர்

ஆகஸ்டு 02, 2020 06:49

குவாலியர் : ம.பி.,யில், நகராட்சி அலுவலக பெண்கள் கழிப்பறையை, சுத்தம் செய்யும் பணிகளை, அம்மாநில அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர் மேற்கொண்டார்.ம.பி.,யில், முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில எரிசக்தி துறை அமைச்சர், பிரதியுமான் சிங் தோமர், நேற்று, குவாலியரில் உள்ள நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார்.

அவரிடம், சில பெண் ஊழியர்கள், அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதாக புகார் கூறினர். அந்த கழிப்பறையை பார்வையிட்ட அமைச்சர் பிரதியுமான் சிங், அதை சுத்தம் செய்வதற்கான பொருட்களை தரும்படி, அதிகாரிகளிடம் கேட்டார். அவைகளை வைத்து அமைச்சர் கழிப்பறையை சுத்தம் செய்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்