Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அசாம் மாநிலத்தில் செப்.1-ல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு

ஆகஸ்டு 02, 2020 06:55

கவுகாத்தி: அசாமில் பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

இம்மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் அங்கு மத்திய அரசு அறிவித்துள்ளபடி ஆக.31 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறியது, அசாமில் கொரோனா பரவல் கட்டுக்குள்ளது. இதையடுத்து மத்திய அரசு அனுமதித்தால், செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க நவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னதாக வரும் ஆக.23 முதல் 30-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும் இதில் அவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்