Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலூரில் தேர்தல் முன்விரோதத்தில் ஒருவர் வெட்டிக்கொலை: 25 படகுகளுக்கு தீ வைப்பு

ஆகஸ்டு 02, 2020 07:06

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் 25 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் தாழங்குடா கிராமத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் ஊராட்சி தலைவர் மாசிலாமணியின் மனைவி பிரவீனா, மதியழகனின் மனைவி சாந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றி பெற்றார். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பகை ஏற்பட்டது. இதையொட்டி அடிக்கடி கைகலப்பு, மோதல் நடந்துள்ளன. இதுதொடர்பாக இருதரப்பினரும் மாறி, மாறி போலீசில் புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் நேற்று மர்மமான முறையில் தாழங்குடா கிராமத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதில் ஊராட்சி தலைவர் சாந்தி மற்றும் அவரது கணவர் மதியழகனுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து மதியழகன் தரப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சேதப்படுத்தி தீவைத்துள்ளனர். மேலும் சுமார் 25 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டன, இரு சக்கர வாகனங்கள், கார்கள் சூறையாடப்பட்டன. மோதல் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்