Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்: லடாக்கில் இந்தியா ராணுவம் முக்கிய திட்டம்

ஆகஸ்டு 02, 2020 07:35

லடாக்: லடாக்கில் சீனா படைகளை வாபஸ் வாங்கினாலும், இந்தியா இந்த வருட இறுதி வரை எல்லையில் ரோந்து பணிகளை குறைக்காமல் தொடர்ந்து செய்து வரும் என்று கூறுகிறார்கள். இதற்காக இந்திய ராணுவம் முக்கியமான திட்டங்களை வகுத்துள்ளது.

லடாக்கில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. எல்லையில் அமைதி திரும்பி வருகிறது. படைகள் வாபஸ் வாங்கப்பட்டு வருகிறது என்று சீனா தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா இதை மறுத்துள்ளது. சீனா இன்னும் முழுமையாக படைகளை வாபஸ் வாங்கவில்லை. எல்லையில் மொத்தமாக நிலைமை இன்னும் சரியாகவில்லை என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் லடாக்கில் ஏப்ரல் மாதத்தில் இருந்த சூழ்நிலை மீண்டும் திரும்ப வேண்டும். அப்போது சீன படைகளும், இந்திய படைகளும் எங்கு இருந்ததோ அதே நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டும் என்று இந்தியா கூறி வருகிறது. அதாவது சீனா இப்போது படைகளை வாபஸ் வாங்கியது எல்லாம் போதாது.மொத்தமாக நிலைமை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும், என்று இந்தியா உறுதியாக கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவிடம் படைகளை வாபஸ் வாங்கிவிட்டதாக கூறும் சீனா இன்னொரு பக்கம் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் சீனா இன்னும் படைகளை குவித்து வருகிறது. பாங்காங் திசோவில் கட்டுப்பாட்டு பகுதி 5 மற்றும் 6 மேலும் ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டு பகுதி 17ல் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு டென்ட்களை அமைத்து வருகிறது.

இது தொடர்பாக வெளியான உளவு தகவல்கள், ராணுவ தகவல்கள், சாட்டிலைட் புகைப்படங்கள் இதை உறுதி செய்துள்ளது. அதிலும் லெப்டினன்ட் ஜெனரல் திபீந்தர் சிங் ஹூடா இதை உறுதி செய்தும் இருக்கிறார். இவரின் கூற்றுப்படி, எல்லையில் சீனா ஏதோ திட்டமிடுகிறது. குளிர் காலத்தை கருத்தில் கொண்டு சீனா தாக்குதல் நடத்த நினைக்கலாம். குளிர் காலத்திற்காக சீனா முக்கியமான திட்டங்களை போடுகிறது என்று கூறி உள்ளார். 

இந்த நிலையில்தான் லடாக்கில் இந்தியா புதிய திட்டத்தை வகுத்து உள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி லடாக்கில் சீனா படைகளை வாபஸ் வாங்கினாலும், இந்தியா இந்த வருட இறுதி வரை எல்லையில் ரோந்து பணிகளை குறைக்காமல் தொடர்ந்து செய்து வரும் என்று கூறுகிறார்கள். இதற்காக குளிர்கால தி்ட்டம் ஒன்றை வகுத்துள்ளது. குளிர் காலம் முடியும் வரை இந்தியா எல்லையில் படைகளை வாபஸ் வாங்காது என்று கூறப்படுகிறது.

குளிர் காலத்தில் எல்லையில் சீனா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அதனால் அதுவரை இந்திய வீரர்கள் 40 ஆயிரம் பேர் வரை லடாக்கில் ரோந்து பணிகளை செய்வார்கள். சீனாவை நம்ப முடியாது. மிக நீண்ட கால பாதுகாப்பு பணியை இந்தியா மேற்கொள்ள போகிறது. அதுவரை இந்திய வீரர்களின் அணிவகுப்பு தொடர்ந்து இருக்கும். எல்லையில் இருந்து இப்போதைக்கு இந்தியா தனது கண்களை எடுக்காது என்று, இந்திய ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்