Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தள்ளுவண்டியில் கொரோனாவால் இறந்த மூதாட்டி உடல்: தேனியில் பரபரப்பு சம்பவம்

ஆகஸ்டு 02, 2020 07:56

தேனி: தேனி மாவட்டம் கூடலுாரில் கொரோனா பாதிப்பில் இறந்த மூதாட்டியின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்லமால் தள்ளுவண்டியில் வைத்து தள்ளி உடலை சூடு காட்டுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூடலுார் 14 வது வார்டு அழகுப்பிள்ளை தெருவைச்சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர்கள் கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டியை சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர்  அவர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். முன்னதாக சிகிச்சை பெற்ற அவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் மூதாட்டிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக மூதாட்டி அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் உடலை எடுத்துச் செல்ல சுகாதாரத் துறையினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனா. ஆனால் சுமார் 12 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை.

இதற்கிடையே மூதாட்டியின் உடலை விரைந்து எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு தாமதமாகி கொண்டிருந்தது. மேலும் மூதாட்டியின் உறவினர்கள் நகராட்சி ஆணையாளாரிடமும் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடமும் பல முறை நேரிலும் அலைபேசி வழியாகவும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்பதை தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவேயில்லை. இதனால் வேறு வழி தெரியாமல் தள்ளு வண்டி மூலம் கூலித் தொழிலாளி ஒருவரிடம் உடலை கொண்டு செல்லும் படி மூதாட்டியின் மகன் கூறினார். இதையடுத்து மூதாட்டியின் உடல் துணியால் முழுமையாக மூடப்பட்டு தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டது. கூடலுார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே கொரோனா பாதித்து இறந்த மூதாட்டியின் உடலை உரிய பாதுகாப்பு இல்லமால் தள்ளு வண்டியில் கொண்டு சென்று தனகம் செய்த கூலித் தொழிலாளி அப்பகுதியில் சுற்றித்திரிகிறார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பீதியில் உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்