Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் விடிய விடிய கனமழை

ஆகஸ்டு 03, 2020 06:45

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று மாலை முதல் சென்னையின் முக்கிய இடங்களில் நேற்று பிற்பகல் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஒருசில இடங்களில் விடியவிடிய மழை பெய்தது.

குறிப்பாக தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, கிண்டி, திருவான்மியூர், மாம்பலம், கோயம்பேடு, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
 

தலைப்புச்செய்திகள்