Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாஸ்க் அணியாததால் ஆட்டை கைது செய்த போலீசார்

ஆகஸ்டு 03, 2020 06:53

லக்னோ: உ.பி.,மாநிலத்தில் முகமூடி அணியாத ஆட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மக்கள் தங்கள் நாய்களுக்கு முகமூடி அணிவிக்க செய்கிறார்கள்.அதனால் ஆடுகளுக்கு ஏன் கூடாது என போலீசார்ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி.,மாநிலம் கான்பூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பெக்கோங்கஞ்ச் பகுதியில் ஆடுஒன்று சாலையில் சுற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆட்டை கைது செய்த போலீசார் தங்களுடைய ஜீப்பில் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். ஆடு கைது செய்யப்பட்டதை கண்ட அதன் உரிமையாளர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய ஆட்டை விடுவிக்கம் படிபோலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடைசியில் ஆட்டை விடுவிக்க ஒப்புக்கொண்ட போலீசார் சாலையில் சுற்றித்திரிய அனுமதிக்க வேண்டாம் எச்சரித்தனர். ஆடு முகமூடிஇல்லாமல் லாக் டவுன் விதியை மீறி சாலையில் சுற்றித்திரிந்தன. ஆகையால் அதனை கைது செய்தோம் என போலீசார்ஒப்புக்கொண்டனர்.

அது மட்டுமல்லாது மக்கள் இப்போது தங்கள் நாய்களுக்கு முகமூடி அணியச் செய்கிறார்கள், அதனால் முகமூடி அணியாத ஆடை ஏன்கைது செய்யக் கூடாது? என போலீசார் ஒருவர் கேட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து போலீசார் வழக்கை மாற்றி அமைத்தனர்.

இது குறித்து அன்வர்கஞ்ச் டி.எஸ்.பி கூறுகையில் முகமூடிஅணியாததற்காக எந்தை ஒரு ஆட்டையும் கைது செய்யப்படவில்லை. காவல்நிலையத்தில் ஒரு ஆட்டை பிடிக்கவும், பூட்டவும் முடியாது. இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் தவறாக சித்தரித்து வருவதாக கூறினார்.

கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி கர்நாடக மாநிலத்தின் தமகுரு மாவட்டத்தில் 47 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்