Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாந்தா அகாடமி சார்பில் இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் போட்டி: 3 பேருக்கு பரிசு

ஆகஸ்டு 03, 2020 08:06

சென்னை: சென்னை, வானகரம் வேதாந்தா அகாடமி பள்ளி மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு இணைந்து இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கும் விதமாக 5 முதல் 10 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு "Covid 19" பாதிப்பை பற்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடம் வீடியோ பதிவு மூலம் செய்தி சேகரித்து பள்ளியின் வலைதளத்திற்கு அனுப்பும் போட்டியை நடத்தியது.

இப்போட்டியில் பல மாநிலங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களின் பத்திரிக்கையாளர் திறமையை வெளிப்படுத்தினர். பொதுமக்களின் வாக்கொடுப்பு எண்ணிக்கை வைத்து முதல் மூன்று சிறந்த இளம் பத்திரிக்கையாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி  சென்னை வேதாந்தா பள்ளியைச் சேர்ந்த முஹம்மது பைத் முதல் இடத்தையும், பஞ்சாப் மாநிலம் பால் பாரதி பப்ளிக பள்ளியைச் சேர்ந்த சன்யா சர்மா இரண்டாம் இடத்தையும் மற்றும் சென்னை செயின்ட் பிரான்சிஸ் இன்டர்நேஷனல் பள்ளியைச் சேர்ந்த அகில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற இளம் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் வேதாந்தா பள்ளியின் இயக்குநர் சந்தீப் வாசு பாராட்டி பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.

தலைப்புச்செய்திகள்