Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரபிக்கடலில் இந்திய போர்க்கப்பல்கள் குவிப்பு

மார்ச் 18, 2019 07:10

புதுடில்லி: பாக். எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையாலும், பாக், போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும், வடக்கு அரபிக்கடல் பகுதியில் விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 60க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை இந்திய கடற்படை குவித்து வருகிறது. 

புல்வாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.எப்., வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடியாக பாலகோட்டில் இந்திய விமானப்படை மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தொடரந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் இந்திய விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா உள்ளிட்ட 60 போர்க்கப்பல்கள், இந்திய கடலோர காவல் படையின் 12 போர்க்கப்பல்கள் வடக்கு அரபிக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களான ஐ.என்.எஸ் அரிஹந்த், ஐ.என்.எஸ் சக்ரா ஆகியவையும் பாக்., நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.  
 

தலைப்புச்செய்திகள்