Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க.,வில் ஆறு வாரிசுகள் போட்டி

மார்ச் 18, 2019 07:23

சென்னை: லோக்சபா தொகுதிகளுக்கான, தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில், வாரிசுகள் ஆறு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் மகள் கனிமொழி; பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின் மகன் தயாநிதி, மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களுடன், முன்னாள் அமைச்சர்களான, பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, ஆற்காடு வீராசாமியின் மகன், டாக்டர் கலாநிதி என, வாரிசுகள் ஆறு பேருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் என, இரு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில், 13 புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்