Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இறந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வழங்கினார்

ஆகஸ்டு 04, 2020 09:13

புதுடெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கியுள்ளார்.

டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பி.எஸ்.ஏ.) மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளித்து வந்த, 28 வயதான டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஜூன் மாத இறுதியில் உறுதியாகியுள்ளது. ஆனால், ஒரு மாதம் தீவிர சிகிச்சை பெற்றும், கொரோனாவால் ஜோகிந்தர் சவுத்ரி உயிரிழந்தார்.

இந்த நிலையில், டெல்லி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 கோடி நிதி உதவியாக வழங்கியுள்ளார். டாக்டர் சவுத்ரி தியாகம் மற்றும் டெல்லி மக்களுக்காக செய்த தியாகத்திற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். டாக்டர் சவுத்ரியின் குடும்பத்தை காப்பாற்ற டெல்லி அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் கூறினார்.

"டாக்டர் சவுத்ரி கொரோனா தொற்று காரணமாக காலமானார். நான் அவரது குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கினேன்" என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

தொற்றுநோய்களின் போது, ​​மருத்துவர்கள் நோயாளிகளுக்காக இரவும் பகலும் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர் சவுத்ரி டெல்லியின் அத்தகைய போர்வீரர். ஒவ்வொரு நாளும் கேஸ் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ அதிகாரிகளின் இடைவிடாத பணிகள் கணிசமாக பங்களித்துள்ளன. பாசிட்டிவ் விகிதம் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்