Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடக மாநில உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு

ஆகஸ்டு 05, 2020 06:06

பெங்களூரு:சசிகலாவின் ஆடம்பர சிறை வாழக்கையை வெளிக்கொணர்ந்த டி.ரூபா, தற்போது மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் டி.ரூபா. இவர் கடந்த 2000 ம் ஆண்டில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி.. தேர்வில் 43 வது இடத்தை பிடித்தார். தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலேயே பணியில் சேர்ந்தார். வடக்கு கர்நாடகாவை சேர்ந்த தர்வாத் மாவட்ட எஸ்.பி., யாக பணியில் சேர்ந்தார்.அன்று முதல் தனது அதரடி நடவடிக்கையால் புகழ் பெற்றார். கடந்த2017 ம் ஆண்டு வரையில் 17 வருடங்களில் மொத்தம் 41 இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

கடந்த 2017 -ல் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் விஜபி சலுகைகளை பெற்று வருவதாக புகார் எழுந்தது. அப்போது அச்சிறையின் அதிகாரியா பணி புரிந்து வந்த ரூபா இதனை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் சசிகலா விரும்பிய நேரத்தில் வெளியே சென்றுவருவதற்கும், விரும்பிய உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு தனி சமையல் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் மேலும் பல வசதிகளை பெறுவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அச்சமயத்தில் இவ்விசயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அதன் பின்னர் ரூபா என்பவர் யார் என அனைத்து மாநில மக்களும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர் அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார். தற்போது ரயில்வேதுறையின் ஐ.ஜி.,யாக பெங்களூருவில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் மாநில அரசின் உள்துறை செயலாளராக பதவியேற்றுள்ளார்.

தலைப்புச்செய்திகள்