Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பரங்குன்றம் தேர்தல்: மார்ச் 22ல் தீர்ப்பு

மார்ச் 18, 2019 07:39

சென்னை : திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 22 ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வழக்கறிஞர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஏ.கே.போஸ் மரணமடைந்ததை அடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இதுவரை இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கை காரணம் காட்டி தேர்தல் கமிஷன், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இதுவரை இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை. 

இந்நிலையில் திமுக தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் மார்ச் 22 க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு. தேர்தல் கமிஷனின் செயல் ஏற்புடையது அல்ல எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்