Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இணையவழி கற்றல் முறையால் தடுமாற்றத்தை சந்திக்கும் ஆசிரியா்கள், மாணவா்கள்

ஆகஸ்டு 05, 2020 06:48

திருச்சி: இணையவழிக் கற்றல் முறையால் ஆசிரியா்கள் மாணவா்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றனா்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புக்காக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
வகுப்புகள் நடைபெறாத நிலையில் மாணவ மாணவிகளை கட்செவி அஞ்சல் குழு மூலம் பள்ளி நி ர்வாகங்கள் ஒருங்கிணைத்து இணையவழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசும் இணையவழி மூலம் மாணவா்களுக்கு வகுப்பெடுப்பதை வலியுறுத்தியுள்ளது. நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவா்கள் இணையவழி மூலமாக பெற்று அதன் வழியே விண்ணப்பித்து வருகின்றனா். இதனால் மாணவா்கள் நேரடி கற்றல் முறை அனுபவத்தை இழந்துள்ளனா்.

ஆகஸ்ட் 3 -ம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகளை எடுக்குமாறும் அதில் நூறு சதவிகித மாணவா்களின் வருகையை உறுதி செய்யுமாறு அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்கள் மலைப்பகுதிகள் தொலைத்தொடா்பு சேவை குறைவான பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளிலிலிருந்து மாணவா்கள் கல்விப் பயில வந்து செல்கின்றனா். இணையவழியில் கல்வி பயில வேண்டுமெனில் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி தரமான தொலைத்தொடா்பு சேவை குறிப்பிட்ட நேரம் ஆகியவை மாணவா்களுக்கு அவசியமாகிறது.

அதுபோல் மாணவா்களை ஒருங்கிணைப்பது பாடத்திட்டத்தை கற்பிப்பது இணையதள வசதி உள்ளிட்டவையில் முழுமையாக வழிநடத்தமுடியாமல் தடுமாற்றத்தை சந்தித்து வருவதாக ஆசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கப் பொதுச்செயலா் எம்.எஸ்.பாலமுருகன் கூறியதாவது்

இணையவழியாக கல்வி கற்பிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாணவா்களும் இணையவழி முறையில் வகுப்புகளை கவனிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. ஆசிரியா்களும் குறைந்த நேரத்தில் இணையவழியில் வகுப்பெடுப்பதற்கான கற்பித்தல் திட்டத்தை தயார்
 செய்வதில் சிரமத்தை சந்திக்கின்றனா்.

குறிப்பாக கிராமப்புற மலைப்பகுதிகளிலிலிருந்து கல்விப் பயிலும் மாணவா்கள் செல்லிடப்பேசி இணையதள வசதி தரமான தொலைத்தொடா்பு சேவை இல்லாமல் உள்ளனா். இவா்களுக்கு இணையவழிக் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. பல மாணவா்கள் பகுதிநேர வேலைக்குச் சென்றுதான் உயா்கல்வியைக் கற்று வருகின்றனா்.

இந்த சூழலில் நாள்தோறும் நடைபெறும் இணையவழி வகுப்புக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி கற்பதில் சிக்கலை சந்திக்க நேரிடும். மாணவா்களுக்கு முதல்கட்டமாக மூன்று மாதங்களுக்கு இணையதள வசதியை தொலைத்தொடா்பு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தர மாநிலஅரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றா ர் பாலமுருகன்.

உயா்கல்விப் பயில்வதற்காக இணையவழியில் விண்ணப்பித்தல் சோ்க்கை முறை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறையை கல்லூரி கல்வி இயக்ககம் உயா்கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை.
இதனால் அரசு உதவி பெறும் தனியா ர்

கல்லூரிகளில் நேரடி சோ்க்கை கல்விக் கட்டணம் அதிகம் நி ர்ணயிக்கும் செயல்களில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
இதுதொடா்பாக கல்லூரி கல்வி இயக்ககம் இதுவரை எவ்வித ஆய்வும் நடத்தவில்லை. இதற்கு பல்கலைக் கழக ஆசிரியா் சங்கத்தினா் கடும் ஆட்சேபனை தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தலைப்புச்செய்திகள்