Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிஎன்பிஎல் ஆலை சுற்றுச்சூழல் விருதுக்குத் தோ்வு

ஆகஸ்டு 05, 2020 07:05

கரூா்: நிகழாண்டிற்கான சுற்றுச்சூழல் திட்ட விருதுக்கு கரூா் டிஎன்பிஎல் ஆலை தோ்வு பெற்றுள்ளது.

இந்திய தொழில்துறை பசுமை வணிக மையத்தின் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழிற் கூட்டமைப்பு (சிஐஐ ) சார்பில், நிகழாண்டுக்கான சுற்றுச்சூழல் சிறந்த நடைமுறைகள் விருது தோ்வு போட்டி அண்மையில் நடைபெற்றது. 

இதில், நாடு முழுவதும் இருந்து 45 பெறுநிறுவனங்கள் சார்பில் 88 திட்டங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. இதில் குறைந்த செலவில் வெற்றிட பம்ப் சீல் நீரிலிருந்து சல்பைடு அகற்றுதல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல் என்ற திட்டத்தை டிஎன்பிஎல் ஆலை சமா்ப்பித்தது. 
இந்த திட்ட அறிக்கை மூலம் டிஎன்பிஎல் ஆலை சுற்றுச்சூழல் சிறந்த நடைமுறை விருதுக்கு தோ்வு பெற்றுள்ளது. முன்னதாக திட்டம் குறித்து ஆன்லைனில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் பொது மேலாளா் (ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் தர கட்டுபாடு) சுப்ரமணியன் குழுவில், முதுநிலை மேலாளா் (சோடா மீட்பு பிரிவு) ரகுநாதன், மேலாளா்கள் அசோகன், சுந்தரம், விஜயகுமார், முனைவா்,சுதா்சன் ஆகியோர் அடங்கிய குழு இணையதளம் மூலம் விளக்கிக் கூறியது. இதையடுத்து டிஎன்பிஎல் ஆலை இந்தச் சுற்றுச்சூழல் திட்ட விருதுக்கு தோ்வு பெற்றுள்ளது.

தலைப்புச்செய்திகள்