Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,51,449 ஆக உயர்வு: 2,804 பேர் பலி

ஆகஸ்டு 06, 2020 07:35

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 5,407 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,679 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சமீபகாலமாக பெங்களூருவில் கொரோனாவிலிருந்து அதிகமானோர் குணமடைந்து வருவதாக மாநகர கமிஷனர் தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு 14212 ஆக இருந்தது. ஆனால் அதே காலகட்டத்தில் 15,214 பேர் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கர்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் 5619 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதயைடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,449 ஆக உயரந்தது.

பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 100 கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களில் மொத்தம் 73,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்