Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறக்கும் வி.ஐ.பி. வேட்பாளர்கள், கிராக்கியில் விமானம்

மார்ச் 18, 2019 08:08

புதுடில்லி: பல்வேறு கட்சி வி.ஐ.பி.,கள் பறந்து, பறந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வசதியாக தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்களை பதிவு செய்யும் வேலையில் பெரிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. 

மத்திய விமான போக்குவரத்து இயக்குனரக வழிகாட்டுதல்படி, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்கும் விமானங்கள் இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்டவையாக இருக்க வேண்டும். அப்போது தான், பறக்கும்போது ஒரு இன்ஜின் பழுதானாலும் இன்னொரு இன்ஜினை வைத்து பாதுகாப்பாக தரை இறங்கலாம். இதுபோன்ற விமானங்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், கிராக்கியும் அதிகரிக்கிறது. 

ஆனால் இந்த விமானங்களில் பணத்தை கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை.2014 தேர்தலின்போது மட்டும் ஹெலிகாப்டர் நிறுவனங்களுக்கு வாடகையாக மொத்தம் ரூ.120 கோடி வசூலானதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 
 

தலைப்புச்செய்திகள்