Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொடைக்கானலில் பலத்த காற்று: பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது

ஆகஸ்டு 06, 2020 07:56

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மரங்களை அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்கிறது. பலத்த காற்று வீசிவருகிறது. கொடைக்கானல் ஏரிச்சாலை, பூம்பாறை, கிளாவரை, பூண்டி, அப்சர் வேட்டரி ஆகியப் பகுதிகளிலும் இரவில் வில்பட்டி பிரிவு, மாட்டுப்பட்டி ஆகியப் பகுதிகளிலும் மரங்கள் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் கொடைக்கானல் நகரம் மற்றும் மலைக் கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் பெண்டர்லாக் சாலையில் இரவில் மரம் விழுந்ததில் நகராட்சிக்கு சொந்தமான 7−கடைகள் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக கடைகள் பூட்டியிருந்ததால் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரலும் நிலவி வருவதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான குளிர் நிலவுகிறது.
 

தலைப்புச்செய்திகள்