Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்; 4 பேர் சடலமாக மீட்பு

ஆகஸ்டு 07, 2020 06:55

மூணார்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 80 பேர் மாயமானார்கள். 4 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் பெட்டிமுடி டிவிஷனில் உள்ள டீ எஸ்டேட் பகுதியில், நேற்று (ஆக., 06) இரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை 4: 30 மணியளவில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 80 பேர் மாயமாகினர். அதில் இருந்து தப்பித்த சிலர், தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அதிகாரிகள் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக, மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரயவராய் பாலம் சேதமடைந்துள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் பருவமழை துவங்கியதை தொடர்ந்து, மழை தொடர்பான சம்பவங்களில், இதுவரை கேரளாவில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்