Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழை: 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தஞ்சம்

ஆகஸ்டு 07, 2020 07:11

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து கொட்டி வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மாநிலத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. மலப்புரம் மாவட்டத்தின் நிலாம்புர் கிராமத்தில் சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் நீர் சூழ்ந்தது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு, மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் தொடர்கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருச்சூர் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல இடங்களில் வீடுகள் மீது மரங்கள் சாய்ந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேர் காயம் அடைந்தனர், 12 வீடுகள் முற்றிலும் பாதிப்பு அடைந்தன. வயநாடு மாவட்டத்தில் இருவரும், திருவனந்தபுரம், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதில் மரங்கள் சய்ந்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வயநாடு, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆக. 7 வரை அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்டும், எர்ணாகுளம்,, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு வரும் ஆக., 9 வரை கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்டும் வானிலை மையம் விடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்