Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ. தலைவருடன் நடிகர் சிரஞ்சீவி திடீர் சந்திப்பு: மீண்டும் அரசியலுக்கு வருகை?

ஆகஸ்டு 07, 2020 07:15

ஐதராபாத்: ஆந்திர மாநில பா.ஜ., தலைவர் சோமு வீரராஜூவை பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதன் மூலம் சிரஞ்சீவி மீண்டும் அரசியலில் நுழையும் தனது ஆசையை பூர்த்தி செய்ய பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் என ஆந்திர மாநில ஊடகங்கள் மற்றும் உள்ளூர் டி.வி. சானல்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

முதல்வர் கனவுடன் 2008 ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கி 2009 ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலை சந்தித்து படுதோல்வியடைந்தார் நடிகர் சிரஞ்சீவி. 2012-ல் தனது கட்சியை காங்.குடன் இணைத்து மத்திய அமைச்சரானார். 2017-ல் தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்து அதன்படி ஒதுங்கியுள்ளார்.

தற்போது சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பா.ஜ. கூட்டணியில் உள்ளது. 2024-ம்ஆண்டு நடக்க உள்ள தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் நடிகர் சிரஞ்சீவி பா.ஜ. தலைவரை சந்தித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்