Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் தவித்த 9.5 லட்சம் இந்தியர்கள் மீட்பு

ஆகஸ்டு 07, 2020 07:21

புதுடெல்லி: வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த 9.5 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. உலகில் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு கடந்த மே 7-ம் தேதி வந்தே பாரத் திட்டத்தை துவக்கியது.

இது தொடர்பாக மத்திய வெளியுறுவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியது கூறியது, வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வர நான்கு வெவ்வேறு கட்டங்களில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விமானங்களை மூலம் 746 முறை இயக்கி நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் வாயிலாக இதுவரை 9.5 லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். ஆக.1-ம் தேதி முதல் ஐந்தாம் கட்டத்தினை துவக்கியுள்ளோம்.

தலைப்புச்செய்திகள்