Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விபத்தில் உயிரிழந்த விமானி இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்

ஆகஸ்டு 08, 2020 05:16

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான, விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் சாதே, ஏர் இந்தியாவில் பணிக்கு சேரும் முன், இந்திய விமானப் படையின் பைலட்டாக இருந்துள்ளார். சாதே குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: சாதே, மிகவும் தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர். அவருக்கு 58 என்டிஏ தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்தவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்