Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்று திறனாளிகளுக்கு தேர்தலில் இடஒதுக்கீடு?: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்டு 08, 2020 05:40

சென்னை : அனைத்து வகையான தேர்தலிலும், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீடு கோரிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில், ரமேஷ் என்பவர் தாக்கல் செய் மனு:லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தேர்த லில், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு என, இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, அனைத்து தேர்தலிலும், மாற்று திறனாளிகளுக்கும், 3 சதவீதம் ஒதுக்கும்படி, அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. மனுவை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது மனுதாரரின் மனுவை பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்கும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்