Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோழிக்கோடு விமான விபத்து: டேபிள் டாப் ரன்வே பாதுகாப்பாக இல்லை

ஆகஸ்டு 08, 2020 06:21

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூருவில் ஏற்பட்ட விமான விபத்து சமயத்தில் இது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது அது கண்டு கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது விமான விபத்து ஏற்பட்டுள்ள கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மலை மீது அமைந்துள்ள 'டேபிள் டாப்' விமானநிலையம். இதன் ஓடு பாதையின் முடிவில் போதுமான நீட்டிக்கப்பட்ட பகுதி (buffer zone) இல்லை என தெரிவித்துள்ளார். 'பொதுவாக 240 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரிப்பூர் விமான நிலையத்தில் 90 மீட்டர் வரை தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையின் இருபக்கமும் போதுமான இடம் இல்லை. 100 மீட்டருக்கு பதிலாக 75 மீட்டராக உள்ளது. மேலும், மழைக் காலங்களில் டேபிள் டாப் ஓடு பாதயைில் விமானம் இறங்குவதற்கு போதுமான வழகாட்டு நெறிமுறைகள் இல்லை' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்