Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழப்பு 19 ஆக உயர்வு: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

ஆகஸ்டு 08, 2020 07:14

கோழிக்கோடு: கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 19 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்புள்ளது. மேலும், விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உடன் பயணித்த பலருக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்து பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியதாகவும், அவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்