Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் இருந்த ஹோட்டலில் தீ விபத்து: 11 பேர் பலி

ஆகஸ்டு 09, 2020 08:24

விஜயவாடா: ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டல் ஒன்றில் இன்று (ஆக.,09) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 11பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஹோட்டல் ஒன்று கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், மின் கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிர்பிழைக்க மாடியில் இருந்து குதித்த 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீ விபத்து குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி: விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் நினைவாக எனது எண்ணங்கள் அனைத்தும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். தற்போதைய நிலை குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுடன் விவாதித்தேன். அனைத்து உதவியும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கொரோனா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய செய்தி, மிகுந்த வேதனையளிக்கிறது. மாநில அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். துயரமான இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களை விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்