Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை பார்த்த தூய்மை பணியாளர்கள்

ஆகஸ்டு 18, 2020 10:43

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய அட்டையை அணிந்து வேலைபார்த்தனர். 

கொரோனா காலத்தில் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் பண இருப்பு தொகையை கணக்கு காட்ட வேண்டும். அரசாணை 62-ன் படி உரிய சம்பளத்தை வழங்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டபடி சம்பளத்தை நிலுவையை சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை சட்டையில் அணிந்தபடி அவர்கள் குப்பைகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்