Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோடி பற்றி ஆய்வு செய்த சூரத் மாணவர்

மார்ச் 18, 2019 12:42

சூரத் : குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மெகுல் சோக்ஷி என்பவர் பிரதமர் மோடி குறித்து ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். குஜராத் பல்கலை.,யில் அரசியல் அறிவியலில் பட்ட மேற்படித்த படித்தவர் மெகுல் சோக்ஷி. இவர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசு என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி ஆய்வறிக்கை தாக்கல் செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மோடி குஜராத் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆட்சி நடத்தியதை இவர் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்விற்காக இவர் அரசு அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 450 பேரிடம் பேட்டி எடுத்துள்ளார். 

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மெகுல் அளித்த பேட்டியில், மொத்தம் 450 பேரிடம் 32 கேள்விகளை கேட்டேன். இதில் 25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுக்களால் பெரிதும் கவரப்பட்டதாகவும், 48 சதவீதம் பேர் மோடியின் அரசியல் மார்க்கெட்டிங் சிறப்பானது என பதிலளித்தனர் என்றார். 
வழக்கறிஞரான மெகுல், குஜராத் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். இவர் தனது ஆய்வை, மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 2010 ம் ஆண்டு துவங்கினார். இவரது கேள்விகளுக்கு 51 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவாகவும், 34.25 சதவீதம் பேர் எதிராகவும் பதிலளித்துள்ளனர். நாடு முழுவதும் 81 சதவீதம் பேர் மோடி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்