Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் 5 மாதத்திற்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகம்

ஆகஸ்டு 19, 2020 07:10

சென்னை: 5 மாதத்திற்கு பின் சென்னையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கடைகளில் மொத்தம் 720 கடைகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடைகள் காலை 10 மணிக்குத்திறக்கப்பட்டன. ஒவ்வொரு கடையின் முன்பாக மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று அடி இடைவெளியில் தரையில் வட்டங்கள்
இடப்பட்டிருந்தன.  டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்குத் திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில கடைகளில் காலை 8 மணிக்கே மதுப்பிரியர்கள்
திரண்டிருந்தனா்.

சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூா், சூளைமேடு உட்பட சில இடங்களில் மதுபானங்கள் வாங்க வந்தவா்கள் ஆதார் அட்டை அட்டையுடன் வந்திருந்தனா்.
டாஸ்மாக் கடைகளைத் திறந்த போது கூட்டம் காணப்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் பல கடைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. சில கடைகளில் பாட்டில்களை அதிகளவு வாங்கினா். இந்நிலையில், சென்னையில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மது விற்பனைசெய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பாக, நாளொன்றுக்கு ரூ.20 முதல் 25 கோடிக்கு அதிகமாக மதுபான பாட்டில்கள் விற்பனையாகும். இப்போது அதில் பாதியளவுக்கே விற்பனை நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்