Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயில்வேயில் ஆள் இல்லா உளவு விமானங்கள்

ஆகஸ்டு 19, 2020 07:22

புதுடில்லி : ரயில்வே சொத்துக்களை கண்காணிக்கவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆள் இல்லா உளவு விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சரான பியுஷ் கோயல், சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது: 

ரயில்வே ஸ்டேஷன், ரயில் தண்டவாளம், ரயில் பணிமனை மற்றும் ரயில்வேக்கு சொந்தமான சொத்துக்களை கண்காணிக்க, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களுக்கு வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .இதற்காக, 'நிஞ்சா' என்ற ஆள் இல்லா உளவு விமானங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக, ஒன்பது விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. 

அடுத்த சில மாதங்களில், மேலும், 17 உளவு விமானங்கள் வாங்கப்படும். இவற்றை, ரயில்வே ஸ்டேஷன், தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் பறக்கவிடப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். என்று அமைச்சர் பியுஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

தலைப்புச்செய்திகள்