Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கணித ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஐதராபாத் இளைஞர்

ஆகஸ்டு 19, 2020 07:25

ஐதராபாத்: லண்டனில் மைண்ட ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் நடைபெற்றது.  இதில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் தங்கப்பதக்கம் வென்றார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் எம்.எஸ்.ஓ எனப்படும் மன திறன் மற்றும் மன விளையாட்டுகளான (மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக்) போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பங்கு கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான (2020) போட்டி நமது சுதந்திர தினத்தன்று (15- ம் தேதி) லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 13 நாடுகளை சேர்ந்த 29 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் (20) என்ற இளைஞர் கலந்து கொண்டார்.

பல கடினமான சுற்றுக்களுக்கு பின்னர் நீலகந்த பானு பிரகாஷ் இறுதி சுற்றில் 65 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இந்தியர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தலைப்புச்செய்திகள்