Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,092 பேர் மரணம்

ஆகஸ்டு 19, 2020 07:29

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று  பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

சுமார் 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இந்தியாவில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மத்திய-மாநில அரசுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் மேலும் 64,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  27,67,274 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 1,092 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52,889 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,76,514 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 20,37,871 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை  கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 3,17,42,782 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 8,01,518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்