Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி புகார் அடிப்படையில் அறம் மக்கள் நலச்சங்கத் தலைவர் டாக்டர் சு.ராஜா கைது: சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் - எஸ்.ஆர்.கே. ரமேஷ்குமார்

ஆகஸ்டு 19, 2020 02:31

* இது துரோக செயல், சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே. ரமேஷ்குமார் அறிக்கை

திருச்சி:  போலி ஆவணங்களை தயாரிக்கும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அளித்த புகார் அடிப்படையில், அறம் மக்கள் நலச்சங்க நிறுவனர் டாக்டர் சு.ராஜா கைது செய்யப்பட்டது துரோக செயல் எனவும், அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் அறம் மக்கள் நலச்சங்கம் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.33 கோடி மோசடி,  போலியான ஆவணம் தயாா் செய்த நிலம் மூலம் ரூ. 32 லட்சம் மோசடி, போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு, போலி ஆவணங்களை தயாரித்து தொழிலதிபர்களை மிரட்டும் கும்பல் என போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் தொடர்கிறது. இவர்கள் பெரிய நெட்வொர்க்காக இருந்தே செயல்படுவதாக தெரிகிறது. இதுபோன்ற போலியான புகாரில் திருச்சி அறம் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சு.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அறம் மக்கள் நலசங்கம். இதன் நிறுவன தலைவராக டாக்டர் சு.ராஜா,  பொதுச்செயலாளராக சு.ரமேஷ்குமார் செயல்பட்டு வருகிறார். டாக்டர் சு.ராஜா எல்.பின். என்கிற ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அறம் மக்கள் நலசங்கம் மூலம் பலதரப்பட்டவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த மருத்துவ, கல்வி, திருமண உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இச்சங்கத்தின் நிறுவனத்தலைவரான டாக்டர் சு.ராஜாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  அதுவும் உரிய காரணம் எதையும் சரிவர சொல்லாமல் கைது செய்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறம் மக்கள் நலசங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அறம் மக்கள் நலச்சங்கம் ஏழை, எளியவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மாணவர்கள் கல்வியில் முன்னேற உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் தவித்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் பல்வேறு நல உதவிகளை வழங்கியுள்ளது. ஆனால் அறம் மக்கள் நலச்சங்கம் மீது சிலர் வேண்டுமென்றே பொய்யான புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

அறம் மக்கள் நலச்சங்கம் இதுவரை எந்தவிதமானமுறைகேடு மோசடிகளிலும் ஈடுபடவில்லை. சங்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை நாங்கள் சட்டத்தின் மூலம் சந்தித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தலைவர் டாக்டர் சு.ராஜா கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஏனெனில் இந்த புகார் குறித்த அனைத்து பிரச்சனைகளும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டது. போலியான ஆவணங்களை தயாரித்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் கோவையை சேர்ந்த அசோக், சிவகாசியை சேர்ந்த கோவிந்தராஜ் இருவரும் சேர்ந்துதான் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இவர்கள் எங்கள் அறக்கட்டளை மீது உண்மைக்கு புறம்பான புகார்களை தெரிவித்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார்கள். அதாவது,  தற்போது அறம் மக்கள் நல சங்கத்தின் மீது புகார் அளித்துள்ள கோவையை சேர்ந்த அசோக் மற்றும் சிவகாசியை சேர்ந்த கோவிந்தராஜ் என்னும் பட்டாசு ராஜா ஆகிய இருவரும் போலியாக ஆவணங்களை தயாரித்து, எங்களது நிறுவனத் தலைவர் ராஜா அவர்களை நான்கரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர். போலி ஆவணங்களை காட்டி மிரட்டியதால் பணம் தரமுடியாது என கூறியதால் பொய்யான வழக்கு பதிவு செய்தனர்.

இந்த அசோக் மற்றும் கோவிந்தராஜ், டாக்டர் ராஜா அவர்களை 11. 2. 2019 அன்று கடத்திச் சென்று நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதன்பேரில் திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்த புகாரில்  (வழக்கு எண் 81/2019) ஆஜராகாமல் தலைமறைவு ஆனார்கள். இதன்பின் மீண்டும் என்னையும், எனது சகோதரர் ராஜாவையும் 21.5.2019 அன்று கடத்த முயற்சி செய்தனர். இதுகுறித்து திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மனு எண் 342/2019. இதனைத்தொடர்ந்து இந்த வழக்குகளை வாபஸ் வாங்க கோரி தொடர்ந்து எங்களை மிரட்டி வந்தனர்.

இந்த அசோக் மீது கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் (குற்ற எண் 1264/2013 ) சுமார் 65 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் சிபிஐல் (குற்ற எண் 1/2017) மேற்கண்ட அசோக், கோவிந்தராஜ் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதாவது குற்றப்பிண்ணனி கொண்ட இந்த அசோக்  கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஸ்வர்ணலட்சுமி ஜுவல்லரி, ஒப்பணக்கார வீதி ஜிஷா ஜுவல்லரி, வைசியாள் வீதி லாவண்யா ஜுவல்லரி, பெரியகடை வீதி லாவண்யா என்டர்பிரைசஸ் ஆகியவை நகைக்கடை நிறுவனங்களை நடத்தி, நகை செய்து தருவதாக கூறி தொழிலதிபர்களிடம் இருந்து கிலோ கணக்கில் தங்கம் பெற்றவர்.

இவர்களிடம் நகை செய்ய தங்கம் கொடுத்த தங்க வியாபாரி, நகை கடை உரிமையாளர், தொழிலதிபர்கள் மற்றும் கடன் கொடுத்த வங்கி மேலாளர் ஆகியோர் கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம்  புகார் அளித்தனர். மேலும் இவர்களிடம் சீட்டு கட்டிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதாவது சுமார் 140 கோடி ரூபாய்க்கும் மேலாக இவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆகிய இடங்களில் சென்று தலைமறைவான இவர்களை பிடித்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அசோக் கோவை சார்பு நீதிமன்றத்தில் ஜ.பி. எண் 1300025/2013யைச் சார்ந்த அவருக்கு எந்த ஒரு சொத்துகளும் கிடையாது, அவருக்கு யாரும் பணமும் தர வேண்டியதில்லை. அவரால் நஷ்டபட்டவர்களுக்கு எதிராக அசோக் திவாலானவராக அறிவிக்கக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் பட்டாசு ராஜா (எ) கோவிந்தராஜ் என்பவர் சிவகாசியில் உள்ள பல பட்டாசு அதிபர்களிடம் கடன் வாங்கி அவர்களை ஏமாற்றும் விதமாக 2018 முதல் தலைமறைவாக உள்ளார். இவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றத்தில் தன்னை திவாலானவராக அறிவிக்கக்கோரி (ஐ.பி.எண் 5/2017) பதிவு செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு பல மோசடி வழக்குகளிலும், தங்களை திவாலானவராக  அறிவிக்கக்கோரியும்  வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள அசோக் மற்றும் பட்டாசு ராஜா (எ) கோவிந்தராஜ் ஆகியோர் தவறான ஆவணங்கள் தயாரித்து மிரட்டி பணம் தராததால் தற்போது மதுரையில் அறம் மக்கள் நல சங்கம் நிர்வாக இயக்குனர் ராஜா அவர்கள் மீது பொய் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் தற்போது இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது. இது ஒரு சாராரை மட்டும் விசாரித்து பாரபட்சமாக நடந்து உள்ளது.

அறம் மக்கள் நலசங்கம் பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது பல நேரங்களிலும் மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் தவித்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் பல்வேறு நல உதவிகளை வழங்கியுள்ளது.  ஆனால் அறம் மக்கள் நலச்சங்கம் மீது சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனை முறைப்படி சட்டத்தின் மூலம் அறம் மக்கள் நல சங்கம் சந்திக்கும் என தனது அறிக்கையில் அறம் மக்கள் நல சங்கம் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்