Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விநாயகர் சிலை உடைப்பால் கோவையில் பரபரப்பு

ஆகஸ்டு 20, 2020 04:01

கோவை: வீடு விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த விநாயகர் சிலையை, முதியவர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை வைசியாள் வீதி, அருகே உள்ள கருப்பராயன் கோவில் வீதியில், ரோட்டின் ஓரத்தில் 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. நேற்று அதிகாலை அந்த விநாயகர் சிலை சேதமடைந்து இருந்தது. சிலை உடைக்கப்பட்ட தகவலறிந்த இந்து முன்னணி, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபர்களால் விநாயகர் சிலை உடைக்கப்பட்டதா? அல்லது ஏதேனும் வாகனம் மோதி உடைந்ததா என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிலை இருந்த இடத்தின் அருகே உள்ள கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும், சேதமடைந்த விநாயகர் சிலைக்கு பதில் அதே இடத்தில் புதிய சிலையை நிறுவும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், சிலை அருகே உள்ள வீட்டின் உரிமையாளர் ராஜப்பன், 87, சிலையை உடைத்தது தெரிந்தது. மேலும், வீட்டின் விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்ததால் சிலையை உடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாக போலீசார் அவரை எச்சரித்து விடுவித்தனர்.

தலைப்புச்செய்திகள்