Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டியது

ஆகஸ்டு 21, 2020 07:47

புதுடெல்லி: உலகையே நடுங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 69 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று உறுதியானது. இது முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம் ஆகும்.

இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

இந்தியாவில் ஒரே நாளில் 62,282 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.96 லட்சத்திலிருந்து 21.58 லட்சமானது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 983 பேர் உயிரிழந்தனர்.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,866லிருந்து 54,849 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.89% ஆக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.30% ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 3.34 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 8.05 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்