Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவட்டும்- விநாயகர் சதுர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்டு 22, 2020 06:55

புதுடெல்லி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித பண்டிகைக்கு வாழ்த்துக்கள். பகவான் விநாயகரின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

கணேஷ் சதுர்த்தி என்றும் அழைக்கப்படும் இந்த விநாயகர் சதுர்த்தி, இந்து பண்டிகை ஆகும். மேலும் இது கைலாஷில் இருந்து, விநாயகர் தனது தாயார் பார்வதியுடன் பூமிக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வீடுகளில் தனியாக நிறுவுவதன் மூலம் அல்லது பகிரங்கமாக விரிவான பந்தல்களில் நிறுவப்பட்டதன் மூலம் விழா கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் குடிமக்களை வாழ்த்தி, கொரோனா தொற்றுநோயை சமாளிக்க விநாயகர் அனைவரையும் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்ததாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கணபதி பப்பா மோரியா! விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள். திருவிழா என்பது சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் அழைத்துச் செல்வதில் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி மற்றும் சகிப்புத்தன்மையின் வெளிப்பாடாகும். கொரோனா தொற்றுநோயைக் கடக்கவும், மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை எங்களுக்கு ஆசீர்வதிக்கவும் விக்னஹார்த்தா நம் அனைவருக்கும் உதவட்டும்.” என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியின் புனித நிகழ்வில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்