Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் ஐ.எஸ். இயக்க பயங்கரவாதி கைது -வெடிகுண்டுகள் பறிமுதல்

ஆகஸ்டு 22, 2020 06:59

புதுடெல்லி: நேற்று இரவு டெல்லி தவுலா கான் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர் ஆயுதங்களுடன் செல்வதாக சிறப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, கரோல்பாக்கில் இருந்து தவுலா கான் செல்லும் ரிட்ஜ் சாலையில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை மடக்கினர். 

அப்போது அந்த நபர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிச் செல்ல முயன்றார். போலீசார் சுற்றி வளைத்து பதிலடி கொடுத்தனர். பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த நபர் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் லோதி காலனியில் உள்ள சிறப்பு படை அலுவலகத்திற்க கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்