Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பெயரால் கோடி, கோடியாக கொள்ளை: தமிழக அரசு மீது டிராஃபிக் ராமசாமி குற்றச்சாட்டு

ஆகஸ்டு 23, 2020 02:26

திருநெல்வேலி: ''தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகள் என்னும் பெயரில்,  அரசுநிதி பாழடிக்கப்படுகிறது. அதற்கேற்றவாறு,  மாநில சுகாதாரத்துறையும், முற்றிலும் சீரழிந்து விட்டது,''  என்று திருநெல்வேலியில், பிரபல சமூக ஆர்வலர் டிராஃபிக்  ராமசாமி தெரிவித்தார்.

பிரபல சமூக ஆர்வலர் "டிராஃபிக்" ராமசாமி திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் கொரோனா பெயரைச் சொல்லி கோடி, கோடியாக  கொள்ளை நடக்கிறது. மாநில சுகாதாரத்துறை முற்றிலும் சீரழிந்து விட்டது. திருநெல்வேலி  மாவட்டம் தாழையூத்து பகுதியில் செயல்பட்டு வருகிற, தனியார் கல்குவாரி விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்டு அதிகமாக, வரைமுறை இன்றி, நிலத்தைத் தோண்டி, கனிம வளங்களைக் கணக்கின்றி எடுத்து வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடம், பலமுறைகள் புகார்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இந்தப் பிரச்சனையை, மாவட்ட நிர்வாகம்,  தட்டிக் கழித்துக் கொண்டே வருகிறது. எனவே, இதுகுறித்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளை"யில், விரைவில், வழக்கு தொடர உள்ளேன்.

கொரோனாவைக் காரணம் காட்டி, மாநில அரசு தமிழக மக்களைத், தேவையில்லாமல் பயமுறுத்தி வருகிறது. மருத்துவமனைகளில், தேவையான  படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன. பி.சி.ஆர். கிட்ஸ்களும் தயாராக   இருக்கின்றன என்றெல்லாம் தமிழக அரசு கூறிவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்திட, போதுமான நடவடிக்கைகளை, விரைந்து எடுக்காமல், மந்தநிலையிலேயே செயல்பட்டு வருவதுடன், தொடர்ந்து, மெத்தனப்போக்கையும் கடைபிடித்து வருகிறது.

மக்களைப் பற்றி கவலைப்படாமல், கொரோனா தடுப்பு பணிகள் என்னும் பெயரில்,  அரசுநிதியினை, மாநில அரசு பாழடித்து வருகிறது. கொரோனா தடுப்பு திட்டத்தில், மக்களின் வரிப்பணம், கோடி, கோடியாக கொள்ளையடிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதிலும், எந்தவொரு அரசு மருத்துவமனையிலும், கொரோனா நோயாளிகளுக்கு,  முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவு, தண்ணீர், கழிப்பறை போன்ற, அடிப்படை வசதிகள் கூட, செய்து கொடுக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் வைத்து, பார்க்கும் போது,  மொத்தத்தில் தமிழக அரசின், சுகாதாரத்துறை சீரழிந்துவிட்டது என்றே சொல்லலாம். விரைவில் வரவிருக்கிற, சட்டமன்றத் தேர்தல் மூலம், தமிழக மக்களுக்கு, நல்லதொரு விடிவுகாலம் பிறக்கும்.

திருநெல்வேலி மாநகராட்சி"யில், சீர்மிகு நெல்லை  திட்டத்திற்கான பணிகள், துவக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அந்தப்பணிகள் யாவும்,  தொடங்கப்பட்ட நிலையிலேயே தான், இன்னும் இருந்து வருகின்றன. எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி மற்ற அத்தியாவசியப் பணிகள் அனைத்தும், முடக்கப்பட்டுள்ளன. நாட்டில், எந்தவொரு  மாநிலத்திலும்,  இல்லாத வகையில், மிக அதிக அளவாக,  தமிழகத்தில் தான், மொத்தம் 32 அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களாலும்,  மத்தியில் உள்ள,  52 அமைச்சர்களாலும், நாட்டு மக்களுக்கு,  எந்தப் பயனும் இல்லை. அவர்கள் அனைவரும்,  கொள்ளை அடிப்பதிலும், சொத்து சேர்ப்பதிலுமே,  குறியாக இருந்து வருகின்றனர்.

இவ்வாறு சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்