Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

ஆகஸ்டு 23, 2020 02:33

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. டெல்லியில் நேற்றுவரை 1,60,016 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 144,138 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 11,594 பேர் மட்டும்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

டெல்லியில் உள்ள மக்கள் அனைவரின் உதவியுடன் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மேலும் கொரோனா பாதிப்பு நிலைமையை டெல்லிஅரசு கையாளும் விதம் நாட்டிலும்,உலகமெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் கொரோனா நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளதால், சோதனை அடிப்படையில், டெல்லி மெட்ரோவை ஒரு கட்டமாக மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு நாங்கள் மையத்தை கோரியுள்ளோம். விரைவில் மையம் ஒரு முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.

 

தலைப்புச்செய்திகள்