Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலை கிராமத்தில் காயம்பட்ட பெண்ணை 40 கி.மீ. தூரம் சுமந்து வந்த ராணுவ வீரர்கள்

ஆகஸ்டு 23, 2020 04:54

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப் பகுதி கிராமத்தில் காயமடைந்த பெண் ஒருவரை இந்தோ திபெத் படை வீரர்கள் 40 கி.மீ. தூரம், சுமார் 15 மணிநேரம் நடைபயணமாக ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி வந்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் லாப்சா என்பது மலைப்பகுதியில் உள்ள குக்கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 20ம் தேதி பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. ஆனால், அங்கு நிலவிய மோசமான வானிலையில் ஹெலிகாப்டரால் தரை இறங்க முடியவில்லை. இதனால் மிலாம் ராணுவ முகாமில் இருந்து இந்தோ திபெத் படை வீரர்கள் அந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமார் 40 கி.மீ. தூரம் நடைபயணமாக தூக்கி வந்தனர் இந்தோ திபெத் படைவீரர்கள். செங்குத்தான மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் ஆறுகள், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளைக் கடந்து அந்த பெண்ணை இந்தோ திபெத் படைவீரர்கள் சுமையாகவே தூக்கி வந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தோ திபெத் பாதுகாப்புப் படை வீரர்களின் இந்த சிலிர்க்க வைக்கும் மனித நேய பயணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

தலைப்புச்செய்திகள்