Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இண்டெர்நெட் கிடைக்காமல் மலை மீது ஏறிச்சென்று படிக்கும் பழங்குடியின மாணவர்கள்

ஆகஸ்டு 24, 2020 07:34

திருச்சி: திருச்சி பச்சமலையில் அமைந்திருக்கும் மணலோடை கிராம பழங்குடியின மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு இண்டெர்நெட் கிடைப்பதற்காக தினமும் ஒரு மைல் தூரம் மலை மீது ஏறிச்சென்று படிக்கின்றனர்.

பச்சமலையின் குகை போன்ற ஒரு பகுதி மட்டுமே இண்டெர்நெட் இணைப்புக்கான ஒரே இடம் என்பதால் பச்சமலையைச் சுற்றியுள்ள கிராமங்களான தோனூர், சின்ன இலுப்பூர், தாளூர், மேலூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் மலை மீது ஏறிச்சென்று அங்கு அமர்ந்து படிக்கிறார்கள்.

பதிவு செய்யப்பட்டு வாட்சப்பில் அனுப்பப்படும் ஆடியோக்களையும், வீடியோ வகுப்புகளையும் டவுன்லோட் செய்வதற்கு இண்டெர்நெட்டுக்காக மலையின் மேல்பகுதிக்கு செல்ல வேண்டி இருப்பதாக 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சுற்றியுள்ள 32 பழங்குடியின கிராமங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு பி.எஸ்.என்.எல் டவர் மட்டும் இருப்பதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அந்த சிக்னலும் கிடைக்காது என்றும் அப்பகுதியின் ஒன்றிய கவுன்சிலர் லலிதா கண்ணன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்