Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்

ஆகஸ்டு 25, 2020 02:26

புதுடெல்லி: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான                               கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் கே. அண்ணாமலை அக்கட்சியில் இணைந்தார்.

கட்சியில் சேர்ந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று கூறினார். "தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன். உண்மையானவரான எல். முருகன் தலைமையில் மாநிலத்தில் தேசிய உணர்வையூட்டும் வகையில் எனது பணிகளையும் முழு நேரத்தையும் செலவிடுவேன்" என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

"நான் நரேந்திர மோதியின் மிகப்பெரிய ரசிகர். தேசிய பாதுகாப்பிலோ, ஊழலிலோ சமரசத்துக்கு இடமின்றி வலுவுடன் நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோதி. ஏற்கெனவே, பல நிலைகளில் பல தலைவர்கள் பாஜகவை வழிநடத்தி இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறார்கள். என்னால் இயன்ற அனைத்து பங்களிப்பையும் கட்சி வளர்ச்சிக்காக வழங்குவேன்" என்று கூறினார் அண்ணாமலை.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. அண்ணாமலை 2011ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ். பணியில் இணைந்தார். 2013ல் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2015ல் அவர் உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராக உயர்த்தப்பட்டார். 2016ல் சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக்கப்பட்டார். 2018ல் அவர் பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டார். உடுப்பியில் பணியாற்றியபோது சட்டவிரோத சக்திகள் மீது அவர் எடுத்த நடவடிக்கைகளுக்காக பாரட்டப்பட்டவர்.

தலைப்புச்செய்திகள்