Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவுக்கு மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பலி

ஆகஸ்டு 25, 2020 03:25

சென்னை: கொரோனா தொற்று காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லட்சுமணன்(84) நேற்று இரவு இறந்தார். செங்கல்பட்டு டவுனில் வசித்து வந்த லட்சுமணன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இரங்கல் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

தோழர் இலட்சுமணன் கால்நடைத்துறையில் பணியாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதில் மாநிலம் முழுவதும் சென்று இரவு - பகலாக உழைத்தார். பின்னர் அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டார். 1981ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக லட்சுமணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985ம் ஆண்டு மாநில செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தமுஎசவின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர். எளிமையாக பழகக் கூடியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும்.  அவரது குடும்பத்தினருக்கு கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது 

என்று மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்