Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஆகஸ்டு 26, 2020 04:35

கொல்கத்தா: இந்தியாவில் ஜூன் மாதத்தில் இருந்து ‘அன்லாக்’ என்ற முறையில் ஒவ்வொரு கட்டமாக தளர்வு அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தொற்றால் பெரும்பாலான மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதியில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ‘அன்லாக் 4’ குறித்து மத்திய அரசு இன்னும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 20ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் செப்டம்பர் 7, 11, 12 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்