Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப். 28 ம் தேதி திறக்கப்படும்: துணை முதல்வர்

ஆகஸ்டு 27, 2020 04:32

சென்னை: கோயம்பேடு மார்க்கெட், செப்., 28ம் தேதி திறக்கப்படும் எனவும், முதற்கட்டமாக உணவு தானிய விற்பனை அங்காடி, செப்., 18ம் தேதி திறக்கப்படும் எனவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட், மே, 5ல் மூடப்பட்டது. இதற்கு மாற்றாக, திருமழிசை, மாதவரம் ஆகிய இடங்களில் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும், கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என, வியாபாரிகள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மார்க்கெட்டில் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது எனவும், முதல்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்.,18 ம் தேதியும், அடுத்தகட்டமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்.,28 ம் தேதியும், அதன்பிறகு அடுத்தகட்டமாக பழக்கடைகள், சிறு மொத்த காய்கறி, பழக்கடைகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்