Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் ஜன்-தன் திட்டத்தின் கீழ் 8 கோடி பேர் பயன்பெறுகிறார்கள்: மத்திய அரசு தகவல் 

ஆகஸ்டு 28, 2020 07:47

புதுடெல்லி: நிதி உள்ளிணைத்தலுக்கான தேசிய இயக்கமான பிரதமரின் ஜன்-தன் திட்டம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்ததையடுத்து பிரதமர் மோடி, வறுமை ஒழிப்பின் அடித்தளம் ஜன் தன் திட்டம் என்று பெருமிதத்துடன் ட்வீட்ட் செய்துள்ளார்.

இந்நிலையில் ஜன்-தன் திட்டத்தின் வெற்றி குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

நிதி உள்ளிணைத்தலுக்கான தேசிய இயக்கமான பிரதமரின் ஜன்-தன் திட்டம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்தது

40.35 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமரின் ஜன்-தன் திட்டம் தொடங்கியது முதல் மொத்தம் ரூ 1.31 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன

பிரதமரின் ஜன்-தன் திட்ட கிராமப்புற வங்கிக் கணக்குகள் 63.6 சதவீதம்; பிரதமரின் ஜன்-தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குகள் - 55.2 சதவீதம்

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், ஏப்ரல் - ஜூன் 2020 காலத்தில் பிரதமரின் ஜன் தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குதாரர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ 30,705 கோடி செலுத்தப்பட்டது.

அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 8 கோடி பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்கள் நேரடிப் பலன் பரிவர்த்தனையைப் பெறுகிறார்கள்

கிராமங்களில் உள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்ப வசதி அளிப்பதாலும், அதிக வட்டிக்குக் கடன் தருபவர்களிடம் இருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பதாலும், இது முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தின் மிகப்பெரிய நிதி உள்ளிணைத்தல் முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் ஜன்-தன் திட்டம் (மக்கள் நிதித் திட்டம்) இந்த உறுதியை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

பிரதமரின் ஜன்-தன் திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "மோடி அரசின் மக்கள்-சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடிக்கல்லாக பிரதமரின் ஜன்-தன் திட்டம் இருந்துள்ளது. 

நேரடிப் பலன் பரிவர்த்தனையாக இருக்கட்டும், கோவிட்-19 நிதியுதவியாக இருக்கட்டும், பிரதமரின் விவசாயிகள் திட்டமாக இருக்கட்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டமாக இருக்கட்டும், ஆயுள் அல்லது சுகாதாரக் காப்பீடாக இருக்கட்டும், இவற்றைச் செயல்படுத்துவதற்கான முதல் அடியான வங்கிக் கணக்கை பிரதமரின் ஜன்-தன் திட்டம் கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்